Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: பொதுத் தேர்தலில் 'ராஜா போமோ' மந்திரவாதி போட்டியிட விருப்பம்

மலேசியாவின் 'ராஜா போமோ' மந்திரவாதி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். பேராக் மாநிலத்தின் பாகான் டாதோக் ஃபிடரல் தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிடுகிறார்.  

வாசிப்புநேரம் -
மலேசியா: பொதுத் தேர்தலில் 'ராஜா போமோ' மந்திரவாதி போட்டியிட விருப்பம்

படம்: Reuters

ஈபோ: மலேசியாவின் 'ராஜா போமோ' மந்திரவாதி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். பேராக் மாநிலத்தின் பாகான் டாதோக் ஃபிடரல் தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிடுகிறார். 

68 வயது மந்திரவாதியின் இயற்பெயர் இப்ராஹிம் மாட் ஸின். வேட்பாளர் நியமனப் படிவத்தை அவர் வெற்றிகரமாக ஏப்ரல் 28ஆம் தேதி தாக்கல் செய்தால் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடிக்குப் போட்டியாக அவர் களமிறங்குவார். 

மலேசிய ஏர்லைன்சுக்குச் சொந்தமான MH370 பயணிகள் விமானம் காணாமற்போனபோது, அதைக் கண்டுபிடித்துத்தர உதவும் நோக்கில் நடத்திய சடங்குகளால் அவர் பிரபலமானார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்