Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நாட்டு நிந்தனைச் சட்டம் அகற்றப்படும்-மலேசியப் பிரதமர் மகாதீர்

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, நாட்டு நிந்தனைச் சட்டத்தைத் தமது அரசாங்கம் நீக்கிவிட்டுப் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் எனக் கூறியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, நாட்டு நிந்தனைச் சட்டத்தைத் தமது அரசாங்கம் நீக்கிவிட்டுப் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் எனக் கூறியிருக்கிறார்.

1948ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நாட்டு நிந்தனைச் சட்டத்துக்கு மாற்றாக அறிமுகமாகும் புதிய சட்ட மசோதாவைத் தமது அரசு உருவாக்கி வருவதாக, நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

பழைய சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டு புதிய சட்டம் ஆகக் கூடிய விரைவில் அறிமுகமாகுமென டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம், பொதுத் தேர்தலுக்கு முந்திய பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது, நாட்டு நிந்தனைச் சட்டத்தை அகற்றுவது...

சென்ற ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன், அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக்கின் நிர்வாகம், தனது எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்காக அந்தச் சட்டத்தை முறைகேடாய்ப் பயன்படுத்தியதாகக் குறைகூறப்பட்டு வந்தது.

பல அரசியல்வாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் மீது, நாட்டு நிந்தனைச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டது.

பக்கட்டான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்த பிறகு, சர்ச்சைக்குரிய அந்தச் சட்டத்தை மீட்டுக்கொள்வதைத் தாமதப்படுத்துவதாகக் குறைகூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்