Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: பாலியல் காணொளி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆடவர் கைது

மலேசிய அமைச்சர் ஒருவருடன், பாலியல் காட்சிகளைக் கொண்ட காணொளியில் இடம்பெற்றதாகக் கூறும் ஆடவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியா: பாலியல் காணொளி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆடவர் கைது

(படம்: CNA)

மலேசிய அமைச்சர் ஒருவருடன், பாலியல் காட்சிகளைக் கொண்ட காணொளியில் இடம்பெற்றதாகக் கூறும் ஆடவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

ஓரினப் பாலுறவில் இரு ஆடவர்கள் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காணொளி அண்மையில் வெளிவந்துள்ளது.
அதில் தாம் இடம்பெற்றதாக ஹஸிக் அஸிஸ் (Haziq Aziz) கூறினார்.

அந்தக் காணொளியில் இடம்பெற்ற மற்றோர் ஆடவர், பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி (Azmin Ali) என்றும் ஹஸிக் அஸிஸ் சொன்னார்.

அதன் தொடர்பிலான விசாரணைக்காக, நேற்று ஹஸிக் அஸிஸ் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.

அந்தச் சர்ச்சையுடன் தொடர்புடைய அமைச்சர் அஸ்மின் அலி, அது தமது அரசியல் வாழ்க்கையைச் சீரழிக்க வரையப்பட்ட சதித் திட்டம் என்று கூறுகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்