Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இணையத்தில் இணைந்ததால், தடையின்றித் தொடரும் வியாபாரம் - மகிழ்ச்சியில் மலேசிய வர்த்தகர்கள்

இணையத்தில் இணைந்ததால், தடையின்றித் தொடரும் வியாபாரம் - மகிழ்ச்சியில் மலேசிய வர்த்தகர்கள்

வாசிப்புநேரம் -

மலேசியாவில் COVID-19 நோய்ப்பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ள வேளையில், மாநில எல்லைகள் திறக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

அது குறிப்பாக வர்த்தகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நேரத்தில், இதுநாள் வரை ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்ய முழு மூச்சுடன் களத்தில் இறங்கியுள்ளனர் வர்த்தகர்கள்.

அதற்காக, அவர்கள் இணையத்திலும் இணைந்துவிட்டனர்.

தீபாவளியை முன்னிட்டு, தமக்கு வரும் வியாபாரங்களில் பெரும்பகுதி சமூக வலைத்தளங்கள் மூலம் கிடைப்பதாக tart வகைப் பலகாரங்களை விற்கும் திருமதி கோகிலவாணி செல்வராஜூ கூறினார்.

கடல் தாண்டி வாடிக்கையாளர்கள்

தீபாவளியை முன்னிட்டு தமது வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார் கோலாலம்பூரைச் சேர்ந்த திரு. சுரேஷ் சின்னையா.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பின்னர் வருமானத்தை இழந்ததால், பலகாரங்களைச் செய்து விற்பனை செய்யும் தொழிலில் இறங்கியதாகத் திரு. சுரேஷ் கூறினார்.

அதற்குச் சமூக வலைத்தளங்களில் நாங்கள் செய்யும் விளம்பரங்களே காரணம்


அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

கடந்த 5 ஆண்டாக ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள திருமதி லட்சுமி நாராயணன், தமது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருவதாகக் குறிப்பிட்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்தபோது, வியாபார வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்கிய எத்தனையோ பேரில் இவர்களும் அடங்குவர்.

சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தினால் நன்மை உண்டாகும் என்பதற்கு இவர்களின் வளர்ச்சியே உதாரணம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்