Images
  • Malaysia Success
    (படம்: Bernama) 

மலேசியா எதிர்பார்ப்புகளை மிஞ்சிய வெற்றியை அடையும்: மகாதீர்

மலேசியா எதிர்பார்ப்புகளை மிஞ்சிய வெற்றியை அடையும் என்று அதன் பிரதமர் மகாதீர் முகமது தமது ஜப்பான் பயணத்தின்போது தெரிவித்துள்ளார்.

பயணத்தின்போது மலேசியா எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே நேரம் ஒதுக்கியதாகவும் அவர் கூறினார்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுவதாக திரு. அபே நம்பிக்கை அளித்ததாகவும் திரு. மகாதீர் தமது Twitter பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.


ஜப்பான் மலேசியாவில் முதலீடு செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவில் முதலீடு செய்வதற்குத் தாங்கள் எதிர்நோக்கும் தடைகளை முதலீட்டாளர்கள் அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய திரு. மகாதீர், புதிய அரசாங்கம் வர்த்தகத்திற்கு ஏதுவாக செயல்படும் என்றும் கூறினார்.

ஜப்பானிற்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தை திரு. மாகதீர் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

 

Top