Images
  • Tatto
    படம்: AFP

மலேசியா: பச்சை குத்தும் கண்காட்சியால் சர்ச்சை

கோலாலம்பூரில் நடைபெற்ற பச்சை குத்தும் கண்காட்சி மலேசியாவில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

கண்காட்சியில் அரை நிர்வாணமாக ஆண், பெண் கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் உடலில் உள்ள பச்சைகளைக் காண்பித்தனர். அந்தப் படங்கள் இணையத் தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

கண்காட்சியைக் காணப் பல நாடுகளில் இருந்து மக்கள் வந்தனர். இருப்பினும் மலேசியாவின் பண்பாட்டுக்கு இதுபோன்ற கண்காட்சிகள் தேவையில்லை என்று பொதுமக்களில் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

3 நாள் கண்காட்சிக்கு ஒப்புதல் வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சர், தாம் இதை எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

மலேசியாவின் கண்ணியமான பண்பாட்டை அந்தக் கண்காட்சி பிரதிபலிக்கவில்லை என்று அவர் சொன்னார்.

கண்காட்சியில் தென்கிழக்கு ஆசியாவின் கலாசாரம் இடம்பெறவில்லை என்றும், ஏற்பாட்டாளர்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடுமென்றும் அவர் எச்சரித்தார்.



 

Top