Images
  • Suspect
    ( படம்: E8 )

மலேசியா: பயங்கரவாதச் சந்தேக நபர்கள் 10 பேர் கைது

மலேசியக் காவல்துறையினர் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் 10 பேரைக் கைதுசெய்துள்ளனர்.

அவர்களில் சிலர் மலாக்கா மாநிலத்தில் புகைக் குண்டுகளைப் பாய்ச்சத் திட்டமிட்டிருந்தனர்.

இரண்டு பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சென்ற மாதம் 11ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் பிடிபட்டனர்.

அவர்களில் 5 பேர் Youths From the East எனும் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

39 முதல் 53 வயதுக்கு இடைப்பட்ட அவர்கள் மத்தியக் கிழக்கில் உள்ள மற்றொரு பயங்கரவாதக் குழுவுடன் இணைந்து ஒரு நாட்டின்மீது தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

அவர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த நாட்டைப் பற்றி எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Top