Images
  • death penalty
    படம்: AFP/Mohd Rasfan

மலேசியாவில் மரண தண்டனை அகற்றப்படலாம்

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் மரண தண்டனையை முற்றிலும் அகற்ற முடிவெடுத்துள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் அதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று  மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

அடுத்த நாடாளுமன்ற கூட்டம் திங்கட்கிழமை தொடங்குகிறது.

மசோதாவைத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொலை, போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு மலேசியாவில் தற்போது மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்ற  பக்கட்டான் ஹரப்பான் அரசாங்கம் மரண தண்டனையை மறுஆய்வு செய்யவிருப்பதாகக் கூறியிருந்தது.


Top