Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிலவகை மீன், இறால் ஏற்றுமதிக்குத் தடைவிதித்திருக்கும் மலேசியா

மலேசிய அரசாங்கம் நான்கு வகையான மீன்கள், இறால் ஆகியவற்றின் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
சிலவகை மீன், இறால் ஏற்றுமதிக்குத் தடைவிதித்திருக்கும் மலேசியா

படம்: AFP/Charly Triballeau

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் நான்கு வகையான மீன்கள், இறால் ஆகியவற்றின் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.

பருவமழைக் காலத்திலும் விழாக் காலத்திலும் சந்தையில் நிலவும் பற்றாக்குறையைப் போக்க அது உதவும் என்று மலேசியாவின் வேளாண் துறை அமைச்சர் சலாஹூதீன் அயுப் (Salahuddin Ayub) தெரிவித்தார்.

கானாங்கெளுத்தி, பாரை, இந்தியக் கானாங்கெளுத்தி, வாவல் ஆகிய  மீன்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து பிப்ரவரி 28ஆம் தேதி வரை அந்தத் தடை நடப்பில் இருக்கும். இறால்களுக்கும் அந்தத் தடை பொருந்தும்.

மூன்று அமைப்புகளுக்கு உறைந்த மீன்களைச் சேமித்து வைக்கும் பொறுப்பு வழங்கப்படும்.

அதே நேரத்தில், கையிருப்பில் இருக்கும் மீன்களை நாடு முழுவதும் விநியோகிக்கும் பொறுப்பும் அவ்வமைப்புகளைச் சாரும்.

மூன்று சேமிப்புக் கிடங்குகளிலும் 400 டன் எடையுள்ள உறைந்த மீன் இருப்பதாக அமைச்சர் சலாஹூதீன் அயுப் (Salahuddin Ayub) கூறினார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்