Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா மீது வர்த்தகத் தடை விதிக்கப்படலாம்: பிரதமர் மகாதீர்

மலேசியா மீது வர்த்தகத் தடை விதிக்கப்படலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகமது எச்சரித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
மலேசியா மீது வர்த்தகத் தடை விதிக்கப்படலாம்: பிரதமர் மகாதீர்

படம்: AFP/Mohd Rasfan

மலேசியா மீது வர்த்தகத் தடை விதிக்கப்படலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகமது எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரால் அதிகரித்துவரும் தன்னைப் பேணித்தனம், ஏற்றுமதி சார்ந்த மலேசியப் பொருளியலைப் பாதிக்கும் என்றார் அவர்.

மலேசியா மீது எந்த நாடு வர்த்தகத் தடைகளை விதிக்கும் என்று டாக்டர் மகாதீர் குறிப்பிடவில்லை.

ஆனால், பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளால் தடையற்ற வர்த்தகம் பாதிக்கப்படுவது தமக்கு ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் துரதிருஷ்டவசமாக மலேசியா மாட்டிக்கொண்டதாக, கோலாலம்பூரில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் மகாதீர் குறிப்பிட்டார்.

மலேசியா ஆகப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் சந்தைகளின் பட்டியலில் சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக சீனாவும், அமெரிக்காவும் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்