Images
  • KL
    படம்:  AFP/Mohd Rasfan

பயண எச்சரிக்கைப் பட்டியலிலிருந்து தமது நாட்டின் பெயரை அகற்றும்படி அமெரிக்காவிடம் மலேசியா கோரிக்கை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசிய வெளியுறவு அமைச்சு பயண எச்சரிக்கைப் பட்டியலிலிருந்து தமது நாட்டை அகற்றுமாறு அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

'K' பட்டியல் என்று அது அழைக்கப்படுகிறது.

அது ஆள்கடத்தல் சம்பவங்களோ பிணைக்கைதிச் சம்பவங்களோ அல்லது இரண்டும் நிகழ்ந்த நாடுகளைப் பட்டியலிடுகிறது.

ஏப்ரல் 9ஆம் தேதி மலேசியாவின் சபா மாநிலத்திற்குச் செல்லும் பயணிகளுக்குப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அங்கு ஆள்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் அந்த எச்சரிக்கை குறித்துத் தெளிவுபடுத்தும்படி மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது.

பயணிகள் சபா மாநிலத்தில் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அங்கு நிலவும் உண்மை நிலவரத்தை அது பிரதிபலிக்கவில்லை என்றும் மலேசியா கூறியது.


Top