Images
  • AstraZeneca
    (படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

மலேசியாவில் AstraZeneca தடுப்புமருந்து தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அறிவிப்பு

மலேசியாவில் AstraZeneca தடுப்புமருந்து தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.

COVID-19 தடுப்புமருந்துச் சிறப்புக் குழுவுடன் நடத்திய சந்திப்புக்குப் பின் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போதைய தரவுகளின்படி தடுப்புமருந்தின் தீமையைவிட நன்மையே அதிகம் என்று டாக்டர் ஆதம் தெரிவித்தார்.

AstraZeneca தடுப்புமருந்து போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைந்த சம்பவத்தைக் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பிரிட்டனில் AstraZeneca தடுப்புமருந்து போட்டுக்கொண்ட 30 பேருக்கு ரத்தம் உறையும் பிரச்சினை ஏற்பட்டது. அதில் 7 பேர் மாண்டனர்.

சில ஐரோப்பிய நாடுகள் AstraZeneca தடுப்புமருந்துக்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

-Bernama 

Top