Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா 600,000 முறை போடத் தேவையான தடுப்புமருந்தை AstraZeneca-விடம் பெறவிருக்கிறது

மலேசியா 600,000 முறை போடத் தேவையான தடுப்புமருந்தை AstraZeneca-விடம் பெறவிருக்கிறது

வாசிப்புநேரம் -

மலேசியா 600,000 முறை போடத் தேவையான COVID-19 தடுப்புமருந்தை AstraZeneca நிறுவனத்திடமிருந்து பெறவிருக்கிறது.

தடுப்புமருந்து ஜூன் மாதம் மலேசியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் மலேசியாவில் COVID-19 தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கின.

மலேசியா AstraZeneca நிறுவனத்திடமிருந்து
12.8 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்பு மருந்தை வாங்குகிறது.

அதில் பாதி மருந்து உலகச் சுகாதார நிறுவனத்தின் COVAX திட்டத்தின் கீழ் பெறப்படும்.

தடுப்பு மருந்தின் முதல்தொகுப்பு COVAX திட்டத்தைச் சேர்ந்தது இல்லை என்று மலேசியா தெளிவுபடுத்தியது.

இந்தியா COVID-19 தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்வதைத் தற்போதைக்கு நிறுத்தியிருப்பது மலேசியாவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அது கூறியது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நாட்டின் மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட மலேசியா திட்டமிட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்