Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் உள்ள பெரியவர்களில் 80 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

 மலேசியாவில் உள்ள பெரியவர்களில் 80 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

வாசிப்புநேரம் -

மலேசிய மக்கள்தொகையில் 80 விழுக்காட்டுப் பெரியவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) தெரிவித்துள்ளார்

அந்தத் தகவலை அவர் Twitter பக்கம் மூலம் வெளியிட்டார்.

இனி தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 20 விழுக்காட்டு மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்றும் திரு. இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி மலேசிய மக்கள் தொகையில் 57.1 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

நேற்று முதல் அங்கு 12 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

முன்னிலை ஊழியர்களுக்கும் மூத்தோருக்கும் Booster தடுப்பூசி போடும் திட்டத்தையும் மலேசியா விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- CNA/vt 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்