Images
  • My police
    படம்: Bernama

மலேசிய அமைச்சரைக் குறிவைத்த ஆபாசக் காணொளிக்குக் காரணமானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்: காவல்துறை

மலேசிய அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபாசக் காணொளியைத் தயாரித்து இணையத்தில் பரவவிட்டதற்குக் காரணமான முக்கிய நபரை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

நபரின் விவரங்களைக் காவல்துறை வெளியிடவில்லை.

விசாரணைகள் முடிவுபெற்றதும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு ஆடவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகக் கடந்த மாதம் தகவல்கள் வெளியாயின.

அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ள ஆடவர்களில் ஒருவர் தாமே என்று கெஅடிலான் கட்சியின் Santubong கிளையின் முன்னாள் இளையரணித் தலைவர் ஹஸிக் அப்துல்லா அப்துல் அஸிஸ் கூறியுள்ளார்.

மற்றொருவர் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திரு. அஸ்மின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.  

Top