Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: போதைப்பொருள் சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் போதைப்பொருள் தொடர்பான சோதனையின்போது வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வாசிப்புநேரம் -
மலேசியா: போதைப்பொருள் சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல்

படம்: Bernama

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் போதைப்பொருள் தொடர்பான சோதனையின்போது வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 கைத்துப்பாக்கிகள், ஒரு கையெறி குண்டு, 349 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப் பொருள்கள் தயாரிப்பதாக அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

வீட்டில் இருந்த கட்டில் ஒன்றின் அடியில் வெடிபொருள்கள் இருப்பதை மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடித்ததாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் தயாரிப்பவர்கள் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வெடிபொருள்களை வைத்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.

சம்பவத்தின் தொடர்பில் 42 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 700,000 ரிங்கிட் மதிப்புள்ள எக்ஸ்டஸி (போதை) மாத்திரைகளும், 15 கிலோகிராம் கஃபைன் (Caffeine) தூளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்