Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பயணிகள் விழிப்புடன் இருக்கவேண்டும்- மலேசியா எச்சரிக்கை

மலேசியாவுக்குச் செல்லும் பயணிகள், குற்றச்செயல்களால் பாதிக்கப்படாவிட்டாலும், மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

வாசிப்புநேரம் -

மலேசியாவுக்குச் செல்லும் பயணிகள், குற்றச்செயல்களால் பாதிக்கப்படாவிட்டாலும், மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

மலேசியப் பயண, கலாசார அமைச்சின் அறிவுரை இது.

பெருவைச் சேர்ந்த நபர் ஒருவர் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்ட சம்பவத்தில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகச் சட்டமன்றத்தில் குறைகூறப்பட்டது. 

திருட்டுச் சம்பவத்தில் சந்தேக நபரும் அவருக்கு உதவியதாக நம்பப்படுவோரும் கையும் களவுமாகப் பிடிபட்ட பிறகும் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மலேசியாவின் அறிவிப்பு வந்துள்ளது.
 பயணப் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எப்போதுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று மலேசியா கூறியிருக்கிறது.

இருப்பினும், பிற நாடுகளைப் போலவே மலேசியாவுக்குச் செல்லும் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்; 

தங்களின் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுடன் சுற்றுவட்டாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அமைச்சின் பேச்சாளர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்