Images
  • virus
    (கோப்புப் படம்: Pixabay) 

மலேசியாவில் உருமாறிய கிருமித்தொற்றால் புதிதாக 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

மலேசியாவில் உருமாறிய கிருமித்தொற்றால் புதிதாக 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அடையாளம் காணப்பட்ட புதிய வகைக் கிருமியால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகைக் கிருமி முதன்முறையாக பேராக், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோரில் சிலர் ஒரு நிகழ்ச்சிக்காகக் கோலாலம்பூர் சென்றிருந்தனர்.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட கிருமியால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வேறு எங்கும் செல்லவில்லை என்பதால் உள்ளூர் அளவில் கிருமி பரவியிருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கோலாலம்பூர், கிளந்தான் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவ நிலையங்களில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.

இதற்கிடையே பஹாங் மாநிலத்தின் ஒரு வட்டாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  

Top