Images
  • kl food
    (படம்: AFP)

மலேசிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்ப்பு

மலேசிய மத்திய வங்கி, இன்று நடைபெறும் அதன் கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த ஆண்டுக்கான வரவுசெலவுப் பற்றாக்குறை அதிகரித்து 3.7 விழுக்காடானதால், மலேசியா நிதிச் சவால்களை எதிர்நோக்குகிறது.

சென்ற மாதத்துக்கான வர்த்தக உபரி 10ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய மத்திய வங்கியின் தற்போதைய வட்டி விகிதம் 3.25 விழுக்காடு. 

Top