Images
  • soh wai ching
    (படம்: Soh Wai Ching)

உலகின் உயரமான கட்டடங்களின் உச்சத்தைப் படியேறியே தொடும் மலேசியர்

படி ஏறவேண்டுமா... மின்தூக்கி இல்லையா என்று நம்மில் பலர் கேட்போம்...

படிகளையே நாடி, உலகின் உயரமான கட்டடங்களின் உச்சத்தைத் தொடுவதை இலட்சியமாய்க் கொண்டுள்ளார் ஆடவர் ஒருவர்!

மலேசியாவைச் சேர்ந்த சோ வாய் சிங் (Soh Wai Ching), உயரமான கட்டடங்களைப் படியேறும் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்.

2017-ஆண்டு இந்த விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. தற்போது உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தை வகிக்கிறார்.

சோ இதுவரை சுமார் 60 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

படிக்கட்டுகள் அனைத்தும் வேறுபடுகின்றன. படிகளின் உயரத்திலும், அவற்றின் அளவிலும் வித்தியாசம் இருக்கலாம். கைப்பிடிகள் இருக்கும் இடங்கள்கூட வேறுபடலாம். ஒரு மாடி ஏறுவதற்கு 2 அல்லது 4 படிக்கட்டுகள் இருக்கலாம். அதுவே சவாலாக அமையும்,

என்று அவர் CNA-யிடம் கூறினார்.

கட்டடங்களைப் படியேறும் விளையாட்டிற்குப் பிரபலமான Empire State Building Run-Up எனும் போட்டியிலும், அவர் அண்மையில் வெற்றிகண்டார்.

சோ 1,500க்கும் மேற்பட்ட படிகளை வெறும் 10 நிமிடங்களில் ஏறினார்!

போட்டியில் வெற்றி கண்ட முதல் ஆசியர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

மேலும் பல சாதனைகளைப் படைக்கத் திட்டமிடுகிறார் சோ.

அடுத்ததாக உலகின் ஆக உயரமான Burj Khalifa கட்டடத்தின் 2,909 படிகளை ஏறி கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற விரும்புகிறார்.

-CNA/tx(aw) 

Top