Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியப் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டு மெதுவடையக்கூடும்

மலேசியப் பொருளியல் வளர்ச்சி இந்த ஆண்டில் மெதுவடையும் சாத்தியம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

வாசிப்புநேரம் -
மலேசியப் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டு மெதுவடையக்கூடும்

(படம்: AFP)


மலேசியப் பொருளியல் வளர்ச்சி இந்த ஆண்டில் மெதுவடையும் சாத்தியம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

பொருளியல் சவால்கள் அதிகரித்திருப்பது அதற்குக் காரணம்.

மலேசிய மத்திய வங்கி, 4ஆம் காலாண்டுக்கான பொருளியல் புள்ளி விவரங்களை இன்று பின்னேரம் வெளியிடும்.

சென்ற மே மாதம் பதவிக்கு வந்த பக்கட்டான் ஹரப்பான் அரசாங்கம், பொருளியல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண உறுதியளித்துள்ளது.

பிரதமர் மகாதீர் முகமது, இந்த வாரத் தொடக்கத்தில் தேசியப் பொருளியல் நடவடிக்கை மன்றத்தைத் தொடங்கிவைத்தார்.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, வீட்டு விலை, வேலையின்மை விவகாரம் ஆகியவற்றை அந்த மன்றம் கையாளும்.

உலக அளவில் வர்த்தகப் பதற்றம் தீவிரமடைந்துவரும் நிலையில், முதலீட்டாளர்-பயனீட்டாளர் நம்பிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதும் மலேசியாவின் பொருளியலை மெதுவடையச் செய்யும் என்று கருதப்படுகிறது.

மத்திய வங்கி சென்ற ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி 5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே பதிவானதாக அறிவிக்கும் என்று நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்