Images
  • indon
    (படம்: Reuters/Willy Kurniawan)

காட்டுத் தீப் பரவலைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்: இந்தோனேசிய அதிபர்

இந்தோனேசியாவில் மீண்டும் காட்டுத் தீ ஏற்படும் சாத்தியமிருப்பதால், அதைச் சமாளிக்க உள்ளூர் அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்று இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo) தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டில் இன்னும் கூடுதலான காட்டுத் தீச் சம்பவங்கள் ஏற்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

சமீப காலமாக, இந்தோனேசியா மிகப் பெரிய வெப்பமண்டல காட்டுத் தீப்பரவலைச் சந்தித்துள்ளது.

அதனால், புகைமூட்டம் மட்டுமில்லாமல், ஓராங் உத்தான், புலிகள் போன்ற அருகிவரும் உயிரினங்களுக்கும் ஆபத்து அதிகம்.

99 விழுக்காடு காட்டுத் தீப் பரவல் தெரிந்தோ, தெரியாமலோ மனிதர்களால் உருவாக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

இம்மாதம், சுமத்ரா காட்டுத் தீச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று திரு. விடோடோ தெரிவித்தார்.

மே மாதம் முதல் ஜூலை வரை,
போர்னியோ தீவின் கலிமந்தான் பகுதியிலும், சுலாவெசி தீவிலும் காட்டுத் தீப்பரவல் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

 

Top