Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவில் காட்டுத் தீச்சம்பவங்கள்; மலேசிய மாநிலங்கள் சிலவற்றில் புகைமூட்டம்

காலை 8 மணி நிலவரப்படி சிங்கப்பூரில் 24 மணி நேரத்துக்கான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 58க்கும் 62க்கும் இடைபட்டிருந்தது. அது மிதமான நிலை.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் காட்டுத் தீச்சம்பவங்கள்; மலேசிய மாநிலங்கள் சிலவற்றில் புகைமூட்டம்

(படம்: New Straits Times)

இந்தோனேசியாவில் காட்டுத்தீச்சம்பவங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவின் சில மாநிலங்களில் புகைமூட்டம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பேராக், சரவாக், பெர்லிஸ், கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய 7 மாநிலங்களில் காற்றுத் தரக் குறியீடு மிதமான அளவில் இருப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவின் காற்றுத் தரக் குறியீடு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தூய்மையான காற்றின் தரம் பூஜ்ஜியத்திலிருந்து 50 வரையிலும் மிதமான தரமுள்ள காற்றின் அளவு 51இலிருந்து 100வரையிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

101-200 என்ற அளவு சுகாதாரமற்றதாகவும் 201-300 என்ற அளவு மிகவும் சுகாதாரமற்றதாகவும் 300க்கும் அதிகமான அளவு ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது.

தெற்கு ஆசியான் வட்டாரத்திற்கான புகைமூட்ட விழிப்புநிலை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

சுமத்ராவிலும் கலிமந்தானிலும் காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து புகைமூட்டம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் பொந்தியானாக் நகரில், பார்க்கும் தொலைவு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கலிமந்தானில் காற்றின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாகவும் தகவலளிக்கப்பட்டது.

காலை 8 மணி நிலவரப்படி சிங்கப்பூரில் 24 மணி நேரத்துக்கான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 58க்கும் 62க்கும் இடைபட்டிருந்தது. அது மிதமான நிலை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்