Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியப் பிரதமரைக் கேலிச் சித்திரமாக வரைந்த ஓவியர் சிறையில்..

மலேசியா போலிச் செய்திகளைத் தடுக்கும் நோக்கில் அதன் தொடர்பான சட்டத்தைத் திருத்துவதற்கான திட்டங்களை அறிவித்திருந்தது. 

வாசிப்புநேரம் -
மலேசியப் பிரதமரைக் கேலிச் சித்திரமாக வரைந்த ஓவியர் சிறையில்..

(படம்: சேனல் நியூஸ் ஏஷியா)

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கைக் கோமாளிபோல கேலிச் சித்திரமாக வரைந்து வெளியிட்ட பிரபல ஓவியருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்த்தரப்புத் தொண்டரான ஓவியர் ஃபாஹ்மி ரேஸாமீது, இணையத்தில் இன்னொருவரைப் பாதிக்கும் பொய்யான, முறைகேடான பதிவைப் பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது.

ஃபாஹ்மிக்கு 30,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

மலேசியா போலிச் செய்திகளைத் தடுக்கும் நோக்கில் அதன் தொடர்பான சட்டத்தைத் திருத்துவதற்கான திட்டங்களை அறிவித்திருந்தது.

ஃபாஹ்மியின் வழக்குரைஞர் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.

ஃபாஹ்மிமீது அதே போன்ற மேலும் ஒரு குற்றச்சாட்டு வேறொரு நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

1MDB சர்ச்சையின் தொடர்பில் பிரதமர் நஜிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தோரில் அவரும் ஒருவர்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்