Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் அடுத்த பிரமரைத் தெரிவு செய்ய மாமன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு

மலேசியாவின் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வது பற்றி முடிவெடுக்க அந்நாட்டின் மாமன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளார்.

வாசிப்புநேரம் -
மலேசியாவின் அடுத்த பிரமரைத் தெரிவு செய்ய மாமன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு

(படம்: Vincent Tan/ CNA)


மலேசியாவின் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வது பற்றி முடிவெடுக்க அந்நாட்டின் மாமன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளார்.

எதிர்பாராதவிதமாக டாக்டர் மகாதீர் நேற்று பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மலேசிய அரசியல் களத்தில் குழப்பம் நிலவுகிறது.

புதிய கூட்டணி அமைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இன்று மீண்டும் தம் அலுவலகத்துக்குச் சென்ற டாக்டர் மகாதீர், 'அலுவலகத்தில் இன்னொரு நாள்' என்று தமது Twitter பக்கத்தில் பதிவிட்டார்.

திரு. அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்பதைத் தடுக்கும் வகையில், பக்கட்டான் ஹராப்பான் (Pakatan Harapan) கூட்டணியில் இருந்த சிலர், முன்னாள் ஆளுங்கட்சியான UMNOவுடன் சேர்ந்து சதி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை, திரு. அன்வார், டாக்டர் மகாதீரைக் காணப் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தற்போதுள்ள நிலையிலிருந்து முன்னேறிச்செல்வது பற்றி ஆலோசிக்க பக்கட்டான் ஹராப்பான் கூட்டணி இன்று அவசரச் சந்திப்பு நடத்தவுள்ளது.

கூட்டணி ஒப்பந்தத்தின்படி, கெஅடிலான் கட்சித் தலைவர் திரு. அன்வார் மலேசியாவின் அடுத்த பிரதமர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்