Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

18 முறை தோல்விக்கு பிறகு, வழக்கறிஞர் பட்டம் பெற்ற மலேசிய மாணவர்

முயற்சி திருவினையாகும் என்ற பழமொழிக்குச் சான்றாக விளங்குகிறார், மலேசிய சட்டத்துறை மாணவர் முகமது ரஃபிக் இஸாட் ஸைடி (Rafiq Izzat Zaidi).

வாசிப்புநேரம் -
18 முறை தோல்விக்கு பிறகு, வழக்கறிஞர் பட்டம் பெற்ற மலேசிய மாணவர்

(படம்: Twitter/@RaffiqIzzat)

முயற்சி திருவினையாகும் என்ற பழமொழிக்குச் சான்றாக விளங்குகிறார், மலேசிய சட்டத்துறை மாணவர் முகமது ரஃபிக் இஸாட் ஸைடி (Rafiq Izzat Zaidi).

18 முறை தேர்வுகளில் தோல்வியடைந்தாலும் மனம் தளராது 19 ஆவது முறையாகத் தேர்வுகளில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 2013இல் பட்டக்கல்வியைத் தொடங்கினார் ரஃபிக்.

பாடங்களை மெதுவாகக் கற்றுக்கொள்பவர் எனத் தன்னைத் தானே வருணித்துள்ளார், ரஃபிக்.

ஒரு பாடத்தில் தேர்ச்சியடைய சுமார் 3 முறை தேர்வு எழுதியதாக அவர் சொன்னார்.

தமக்குக் கற்றல் குறைபாடு ஏதுமில்லை என அவர் கூறுகிறார்.

புதிய சூழல்களில் கற்பதில் சிரமத்தை எதிர்கொண்ட அவர், பாடத்தைப் புரிந்துகொள்வதில் அதிக நேரம் எடுத்துகொள்வதாகப் பகிர்ந்துகொண்டார்.

தோல்வியுற்ற சிலமுறை தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்தாகக் கூறினார் ரஃபிக்.

சக மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று சட்டப் பயிற்சியைத் தொடங்கியபோது தமக்குச் சங்கடமாக இருந்தாய் அவர் சொன்னார்.

தோல்வியைப் பாடமாக எடுத்துகொண்டு குடும்பத்தார், விரிவுரையாளர்களின் ஊக்கத்துடன் தேர்ச்சிப் பெற்றார், ரஃபிக்.

சிறு வயது கனவை நிறைவேற்றியதில் அவர் மகிழ்ச்சி கொள்கிறார்.

எதிர்காலத்தில் சொந்தச் சட்டப் பயிற்சி நிறுவனத்தை தொடங்குவது அவரது இலக்கு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்