Images
  • advertisement
    படம்: Twitter/lati0s and Noor Aziro bin Abdullah

மணமகள் தேட சாலையில் விளம்பரங்களை நிறுவியுள்ள ஆடவர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

மலேசியாவின் திரங்கானு மாநிலத்தைச் சேர்ந்த ஆடவர் மணப்பெண்ணைத் தேடும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.

சாலை வழியே இரண்டு விளம்பரப் பதாகைகளை நிறுவி, அவற்றில் வாழ்க்கைத் துணையைத் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார் 35 வயது நூர் அஸிரோ அப்துல்லா.

சமூக ஊடகங்கள் வாயிலாக மணப்பெண்ணைத் தேடுவதில் போட்டி அதிகம் என்றும் அத்தனை பெண்களில் ஒருவரைத் தெரிவு செய்வதில் குழம்பிப் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

விளம்பரப் பதாகைகளின் மூலம் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பெண்கள் விருப்பம் தெரிவிக்கலாம் என்ற நம்பிக்கையில் அவற்றை நிறுவியதாகக் கூறுகிறார் அவர்.

விளம்பரத்தைப் பதாகைகளைப் பார்த்து கெடா, கோலாலம்பூர் குவாந்தான் போன்ற இடங்களிலிருந்து சிலர் அழைத்து பதாகைகள் உண்மையா என்று விசாரித்துள்ளனர்.

சிலர் இந்த வித்தியாசமான முயற்சிக்காக அவரைப் பாராட்டியுள்ளனராம்.

பதாகையின் படம் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து அது பலரை ஈர்த்துள்ளதாம்.

ஒரு நாள் தமது மனங்கவர்ந்த மனையாட்டி, தம்மைத் தேடி வருவார் என்ற எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அஸிரோ.


Top