Images
  • New Document (10)
     படம்: Australian Border Force

குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் மலேசிய ஆடவர் கைது

ஆஸ்திரேலியாவின், பெர்த் நகரில், குழந்தை தொடர்பான பாலியல் காணொளியைக் கைதொலைபேசியில் வைத்திருந்ததன் பேரில், மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெர்த் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த சம்பவம் நடந்தது. 36-வயது ஆடவர் அங்கிருந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பெயர் குறிப்பிடாத அந்த ஆடவர், கோலாலம்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்ததாகவும், சோதனை நடவடிக்கையின் போது பிடிபட்டதாகவும், ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனை நடவடிக்கையின் போது, அவரது கையடக்கத் தொலைபேசியில், குழந்தை ஒன்றை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காணொளி இருந்தது தெரிய வந்ததாய், அதிகாரிகள் கூறினர்.

அதனை அடுத்து, அந்த ஆடவரின் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு, அவருடைய் பயண விசா ரத்து செய்யப்பட்டதாக, அவர்கள் தெரிவித்தனர்.

அந்த ஆடவர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டால், அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை, 525,000 ஆஸ்திரேலிய டாலர் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம். 

Top