Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: போலி நோட்டுகளை அச்சிட்டு திருமணத்திற்கு நிதி திரட்டிய ஆடவர்

மலேசிய ஆடவர் தமது திருமணத்திற்கு நிதி திரட்ட போலி நோட்டுகளை அச்சிட்டு வங்கியை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
மலேசியா: போலி நோட்டுகளை அச்சிட்டு திருமணத்திற்கு நிதி திரட்டிய ஆடவர்

படம்: REUTERS

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசிய ஆடவர் தமது திருமணத்திற்கு நிதி திரட்ட போலி நோட்டுகளை அச்சிட்டு வங்கியை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

4,000 (1,330 வெள்ளி) ரிங்கிட் மதிப்புமிக்க போலி நோட்டுகளை அவர் அச்சிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சுங்கை மேரா காவல் நிலையத்தில் அந்த 28 வயது சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டார்.

அவர் நூறு ரிங்கிட் மதிப்புமிக்க 25 நோட்டுகளையும் ஐம்பது ரிங்கிட் மதிப்புமிக்க 30 நோட்டுகளையும், சிபுவில் இருக்கும் தமது வசிப்பிடத்தில் அச்சிட்டதாக நம்பப்படுகிறது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமது திருமணத்திற்குப் போதுமான பணம் இல்லாததால் அவ்வாறு செய்ததாக அந்த சந்தேக நபர் கூறினார்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்