Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: பாலியல் காணொளியை விநியோகம் செய்த மேலும் 2 சந்தேக நபர்கள் கைது

பாலியல் காணொளிகளை விநியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை மலேசியக் காவல்துறையினர் தடுத்துவைத்துள்ளனர்.  

வாசிப்புநேரம் -
மலேசியா: பாலியல் காணொளியை விநியோகம் செய்த மேலும் 2 சந்தேக நபர்கள் கைது

படம்: Bernama

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிலாங்கூர்: பாலியல் காணொளிகளை விநியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை மலேசியக் காவல்துறையினர் தடுத்துவைத்துள்ளனர். 

அவர்கள் ஷா ஆலமில் நேற்று தடுத்து வைக்கப்பட்டனர். சம்பவத்தின் தொடர்பில் இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அந்தக் காணொளியில் தம்மோடு இருப்பது மத்திய அமைச்சர் அஸ்மின் அலி என்று அதிலிருப்பதாகக் கூறிக்கொள்ளும் மற்றோர் ஆடவர் குற்றஞ்சாட்டி வருகிறார்.

அந்தக் காணொளி பெரும்பாலும் உண்மையானதாகவே இருக்கக்கூடுமெனத் தெரிவித்துள்ள மலேசியக் காவல்துறைத் தலைவர், அதிலிருப்பவர்களைத் தெளிவாக அடையாளம் காண முடியவில்லை என்று கூறியிருந்தார்.

மலேசியாவில் ஓரினப் புணர்ச்சி சட்டப்படி குற்றம்.

ஓரினப் புணர்ச்சியின் தொடர்பில் அதற்கு முன்னர் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்