Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"மலேசியப் பிரதமர் வரவுசெலவுத் திட்டம் 2021-ஐத் தாக்கல் செய்வதற்குமுன், எதிர்த்தரப்புடன் கலந்தாலோசிக்கவேண்டும்"

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின், அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, எதிர்த்தரப்பினரைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
"மலேசியப் பிரதமர் வரவுசெலவுத் திட்டம் 2021-ஐத் தாக்கல் செய்வதற்குமுன், எதிர்த்தரப்புடன் கலந்தாலோசிக்கவேண்டும்"

படம்: Facebook/Anwar Ibrahim

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின், அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, எதிர்த்தரப்பினரைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

வரவுசெலவுத் திட்டம், முன்னிலை ஊழியர்களின் தேவைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.

மலேசியர்களைக் கிருமித்தொற்றிலிருந்து காப்பாற்றுவதில் முன்னிலை ஊழியர்களின் பணியை அது சுட்டியது.

கிருமிப் பரவலின்போதும், அதற்குப் பிந்திய காலக்கட்டத்திலும் நாட்டின் பொருளியல் வளர்ச்சியை உறுதிசெய்யும் பாதையை அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வகுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்