Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: இன ரீதியான உணர்வுகளைத் தூண்டிவிடும் கருத்துகளை வெளியிட்டதற்காக சமய போதகர் மன்னிப்பு

மலேசியாவில், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஸாக்கிர் நாயக், இன ரீதியான உணர்வுகளைத் தூண்டிவிடும் கருத்துகளை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
மலேசியா: இன ரீதியான உணர்வுகளைத் தூண்டிவிடும் கருத்துகளை வெளியிட்டதற்காக சமய போதகர் மன்னிப்பு

(படம்: Reuters/ Shailesh Andrade)

மலேசியாவில், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஸாக்கிர் நாயக், இன ரீதியான உணர்வுகளைத் தூண்டிவிடும் கருத்துகளை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவைச் சேர்ந்த திரு. ஸாக்கிர், காவல்துறையால் 10 மணிநேரம் விசாரிக்கப்பட்ட பிறகு அவ்வாறு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
எனினும் தாம் ஓர் இனவாதி அல்ல என்றார் அவர்.

மலேசியாவில் சுமார் 3 ஆண்டாகத் திரு. ஸாக்கிர் வாழ்ந்து வருகிறார்.
மலேசியாவில் உள்ள இந்துக்கள், இந்தியாவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களை விட 100 மடங்கு கூடுதல் உரிமைகளைப் பெற்றிருப்பதாக அவர் கூறியிருந்தார். சீன மலேசியர்கள், நாட்டின் விருந்தாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தம்மை எதிர்ப்பவர்கள் தமது கருத்துகளைத் தவறாகச் சித்திரித்திருப்பதாகத் திரு. ஸாக்கிர் கூறினார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக அவரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மலேசியாவின் பல்வேறு அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

குறைந்தது 7 மாநிலங்கள் அவர் பொது நிகழ்ச்சியில் பேசுவதற்குத் தடை விதித்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்