Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிரதமர் மகாதீர் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்?

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகள் பத்தில் இரண்டைத் தமது நிர்வாகம் நிறைவேற்றியிருப்பதாய்க் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
பிரதமர் மகாதீர் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்?

படம்: Mohd RASFAN/AFP

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகள் பத்தில் இரண்டைத் தமது நிர்வாகம் நிறைவேற்றியிருப்பதாய்க் கூறியுள்ளார்.

6 விழுக்காட்டுப் பொருள், சேவை வரியை அகற்றியதையும், வாகன எரிபொருள் மானியங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியதையும் அவர் சுட்டினார்.

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்று 3 வாரம் ஆன நிலையில், பொருள், சேவை வரி ரத்துசெய்யப்பட்டது.

அதற்குப் பதிலாக, விற்பனை, சேவை வரி அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அடுத்ததாக, இவ்வாண்டு இறுதிவரை, வாகன எரிபொருள் கட்டணங்களுக்கான மானியம் வழங்க மலேசிய அரசாங்கம் 760 மில்லியன் டாலரை ஒதுக்கியிருக்கிறது.

மேலும் 6 வாக்குறுதிகளை நிறைவற்றுவதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

எஞ்சிய 2 வாக்குறுதிகளின் தொடர்பில் இன்னும் நடவடிக்கைகள் தொடங்கவில்லை என்றார் அவர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்