Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புல் வெட்டும் இயந்திரத்தால் கொல்லப்பட்ட மலேசிய மாணவி - இரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

மலேசியாவில் பள்ளிக்கூடம் ஒன்றின் திடலில் புல் வெட்டும் இயந்திரத்திலிருந்து பறந்துவந்த கத்தி, ஒரு மாணவியைத் தாக்கிக் கொன்றதன் தொடர்பில் இரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
புல் வெட்டும் இயந்திரத்தால் கொல்லப்பட்ட மலேசிய மாணவி - இரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

(படம்: சமூக ஊடகங்களில் பரவி வரும் படம்)

மலேசியாவில் பள்ளிக்கூடம் ஒன்றின் திடலில் புல் வெட்டும் இயந்திரத்திலிருந்து பறந்துவந்த கத்தி, ஒரு மாணவியைத் தாக்கிக் கொன்றதன் தொடர்பில் இரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக MI Yusof Enterprise, Hisham Rais (M) ஆகிய நிறுவனங்கள் மீது இன்று (டிசம்பர் 12) செரெம்பான் நகர நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

புல் வெட்டும் பணி நடந்துகொண்டிருந்தபோது நூர் அஃபினி ரொஸ்லானும் (Nur Afini Roslan), அவருடைய நண்பர்கள் இருவரும் திடலில் இருந்தனர்.

சம்பவத்தில் நூர் அஃபினி உயிரிழந்தார். நண்பர்கள் இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

இந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

பாதுகாப்பான முறையில் இயந்திரத்தைப் பயன்படுத்தத் தவறிய MI Yusof Enterprise மீதும், பாதுகாப்பான முறையில் இயந்திரம் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்காணிக்கத் தவறிய Hisham Rais (M) மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த இரண்டு நிறுவனங்களின் இயக்குநர்களும் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்