Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியக் கேளிக்கைப் பூங்காக்கள் நாளை மறுநாள் மீண்டும் திறக்கப்படுகின்றன

மலேசியா, அதன் கேளிக்கைப் பூங்காக்களை நாளை மறுநாள் மீண்டும் திறக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியா, அதன் கேளிக்கைப் பூங்காக்களை நாளை மறுநாள் மீண்டும் திறக்கவுள்ளது.

மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அதனைத் தெரிவித்தார்.

நீர் விளையாட்டுக் கேளிக்கைப் பூங்காக்கள் உள்ளிட்ட 54 கேளிக்கைப் பூங்காக்கள், மீண்டும் செயல்படவுள்ளன.

அதன்மூலம், நாடுமுழுதும் உள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவர் என்று திரு. இஸ்மாயில் சொன்னார்.

கேளிக்கை பூங்காக்களின் பரப்பளவைப் பொறுத்து, எத்தனை பேர் உள்ளே அனுமதிக்கப்படுவர் என்பது நிர்ணயிக்கப்படும்.

கேளிக்கைப் பூங்காக்களுக்குச் செல்ல விரும்புவோர், இணையத்தளத்தில் பதிவு செய்யவேண்டும்.

உடல் வெப்பச் சோதனைகள், கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்திகரித்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று, மூத்த அமைச்சர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஹோட்டல்களிலும் பேரங்காடிகளிலும், உடல் வெப்பச் சோதனை குறித்த நடவடிக்கைகள் தளர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்