Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலின்டோ விமானப் பயணிகளின் விவரங்கள் ஊடுருவப்பட்டுள்ளன

மலேசியாவின் Malindo Air விமான நிறுவனம், தனது பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் ஊடுருவப்பட்டதை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மலின்டோ விமானப் பயணிகளின் விவரங்கள் ஊடுருவப்பட்டுள்ளன

(படம்: Bernama)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசியாவின் Malindo Air விமான நிறுவனம், தனது பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் ஊடுருவப்பட்டதை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

மலின்டோ ஏர், தாய் லயன் ஏர் விமானங்களில் பயணம் செய்த சுமார் 30 மில்லியன் பயணிகளின் தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மாஸ்கோவிலுள்ள Kaspersky Lab இணைய பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

பயணிகளின் கடப்பிதழ் விவரங்கள், கைத்தொலைபேசி எண்கள், முகவரிகள் அதில் அடங்கும்.

பயணிகள் அவ்வப்போது தங்களின் விமானக் கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும், பயணிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியாகவில்லை என்றும் மலின்டோ ஏர் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்