Images
  • coins
    (படம்: Reuters)

சீனா: நாளொன்றுக்கு 40 காசில் வாழ்ந்த பெண் மரணம்

சீனா: நாளொன்றுக்கு 2 யுவானில் (40 காசு) வாழ்ந்துகொண்டிருந்த 24 வயது மாணவி மாண்டதாகச் சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

பெற்றோர் இல்லாத அவர், ஒவ்வொரு மாதமும், உறவினர்கள் வழங்கிய பணத்தைத் தம்பியின் சிகிச்சைக்காகச் செலவிட்டார்.

எஞ்சியுள்ள பணத்தில் போதுமான உணவைச் சாப்பிட இயலாத வூ,சத்துக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டார்.

அவரின் எடை 20 கிலோகிராம்.

கடந்த அக்டோபர் மாதம் சுவாசிக்கச் சிரமப்பட்டார்.

வூ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது, அவருக்கு இதயம், சிறுநீரகம் ஆகியவற்றில் பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது.

வறுமை காரணமாக மரணத்திற்குக் காத்திருக்க விரும்பவில்லை என்று Chongqing Morning Post நாளேட்டிடம் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவிய அவரின் கதை, பல்வேறு நபர்களிடமிருந்து நன்கொடையைத் திரட்டியது.

இருப்பினும், காலம் கடந்த நிலையில் அவருக்குச் சிகிச்சை உதவவில்லை... 

Top