Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கம்போடியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மலேசியர்களை விடுவிக்குமாறு மலேசியா அழைப்பு

கம்போடியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது குடிமக்களை விடுவிக்குமாறு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -

கம்போடியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது குடிமக்களை விடுவிக்குமாறு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.

மலேசியர்கள் 47 பேர், கடந்த டிசம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டதை மலேசியாவின் வெளியுறவு அமைச்சு உறுதி செய்தது.

அவர்கள் சட்டவிரோத இணையச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டனர்.

ஆனால், அந்த 47 பேரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோருக்கு, நல்ல சம்பளத்துடன்கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் உத்தரவாதம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புனோம் பென்னிலுள்ள மலேசியத் தூதரக அதிகாரி ஒருவர், அதனைத் தெரிவித்தார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள மலேசியர்கள், ஆள் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என அவர்களின் குடும்பத்தினர் நம்புகின்றனர்.

அவர்களை மீட்க, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்