Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மனைவிபோல் மாறுவேடமிட்டு விமானத்தில் சென்ற கிருமித்தொற்று உள்ள இந்தோனேசிய ஆடவர்

இந்தோனேசியாவில், COVID-19 நோய்த்தொற்று உறுதியான ஆடவர் ஒருவர், தமது மனைவிபோல் மாறுவேடமிட்டு, உள்ளூர் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில், COVID-19 நோய்த்தொற்று உறுதியான ஆடவர் ஒருவர், தமது மனைவிபோல் மாறுவேடமிட்டு, உள்ளூர் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அவர் பெண்கள் முகத்தை மறைக்க அணியும் நிக்காப் என்னும் துணியை அணிந்திருந்தார்.

ஆனால், அவரது மாறுவேடம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ஜக்கர்த்தாவிலிருந்து (Jakarta) டெர்னேட் (Ternate) செல்லவிருந்த விமானத்தின் கழிப்பறையில் அந்த ஆடவர், தான் அணிந்திருந்த துணிகளை மாற்றியதை விமானச் சிப்பந்தி ஒருவர் கண்டுபிடித்துவிட்டார்.

அந்த ஆடவர், தமது மனைவியின் பெயரில் விமானச்சீட்டை வாங்கியுள்ளார்.

அடையாள அட்டை, கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனை முடிவு, தடுப்பூசிச் சான்றிதழ் என அனைத்தும் மனைவியின் பெயரில் இருந்தன.

டெர்னேட்டில் விமானம் தரையிறங்கிய பின்னர், அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்குக் கிருமித்தொற்று இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது.

தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் தொடர்பில், காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

-AP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்