Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மற்றவர்களுக்கான இலவச முகக்கவசங்களைச் சட்டவிரோதமாகப் பெற்று மலேசியாவுக்கு அனுப்பிய ஆடவருக்குச் சிறை

தனிநபர் விவரங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இலவச முகக்கவசங்களைப் பெற்ற ஆடவருக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

தனிநபர் விவரங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இலவச முகக்கவசங்களைப் பெற்ற ஆடவருக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த, சிங்கப்பூர் நிரந்தரவாசி 42 வயது லீ சீ ஹோர்ங் (Lee Chee Horng), 60 வெள்ளி மதிப்பிலான 6 Livinguard முகக்கவசங்களை முறையற்ற வகையில் தானியக்க இயந்திரத்திலிருந்து பெற்றிருக்கிறார்.

அவற்றில் 4 முகக்கவசங்களை, மலேசியாவில் இருக்கும் தனது குடும்பத்திற்கு அனுப்பியுள்ளார்.

லீ, இங்கு பாரம்பரியச் சீன மருத்துவத்தில் ஈடுபட்டுள்ள தனது வீட்டு உரிமையாளருடன் வசித்துவந்தார்.

வீட்டில் கிடைத்த 5 நோயாளிகளின் தகவல்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அவர் முகக்கவசங்களைப் பெற்றிருக்கிறார்.

வேறொரு சம்பவத்தில், தான் கண்டெடுத்த மூத்தோருக்கான PAssion அட்டையைப் பயன்படுத்தியும் லீ முகக்கவசத்தைப் பெற்றார்.

அந்த PAssion அட்டையின் உரிமையாளர், தமது முகக்கவசத்தைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதால் காவல்துறையை அணுகியபோது லீ பிடிபட்டார்.

மோசடி செய்த குற்றத்திற்கு அவருக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டிருக்கலாம்.

-CNA/ll(zl)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்