Images
  • man stabbed malaysia (1)
    (படம்: Bernama)

மலேசியா: 14 கத்திக்குத்துக் காயங்களுடன் மாண்டு கிடக்கக் காணப்பட்ட ஆடவர்

மலேசியாவின் பாஹாங் மாநிலத்தில் 14 கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் ஒருவர் நேற்று (ஜனவரி 12) மாண்டு கிடக்கக் காணப்பட்டார்.

55 வயது R. மனோகரன் சில வெளிநாட்டினருடன் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.

நேற்று பிற்பகல் அவரைக் காணச் சென்ற வேன் ஓட்டுநர் ஒருவர், வாடகை வீட்டின் அறையில் மனோகரனின் உயிரற்ற உடலைக் கண்டார். .

மனோகரன் மியன்மாரைச் சேர்ந்த ஊழியர்களைப் புக்கிட் தேங்காவில் இருக்கும் தொழிற்சாலைகளில் பணிக்கு அமர்த்தும் முகவர் என்று அந்த வேன் ஓட்டுநர் காவலர்களிடம் கூறினார்.

நேற்று காலை 10 மணி அளவில், வெளிநாட்டு ஊழியர்களை அவர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பியபின் இளைப்பாற எண்ணி மனோகர் வீடு திரும்பியதாக வேன் ஓட்டுநர் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஊழியர்களுக்கான உணவை மனோகரன் அனுப்பத் தவறியதால் தொழிற்சாலை நிர்வாகம் அந்த வேன் ஓட்டுநருடன் தொடர்புகொண்டது.

அதனை அடுத்து, திரு. மனோகரனைத் தேடிச் சென்ற அந்த வேன் ஓட்டுநர் அவர் மாண்டுகிடக்கக் கண்டார்.

மனோகரனின் வயிற்றுப்பகுதியில் 33 சென்ட்டிமீட்டருக்கும் அதிகமான நீளங்கொண்ட கத்தி செருகியிருந்தது.

சம்பவம் குறித்து மலேசியக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனோகரனுடன் வசித்த மியன்மார் ஊழியர் 10 பேரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.





 

Top