Images
  • baby
    படம்: Pixabay 

'என்னைக் கேட்டுப் பெற்றீர்களா?'-பெற்றோர் மீது பிள்ளை வழக்கு

இந்தியாவில், தனது அனுமதியின்றித் தம்மை ஈன்றெடுத்ததற்காகத் தனது பெற்றோர்மீது வழக்கு தொடுக்க ரஃபேல் சாமுவேல் (Raphael Samuel) என்னும் ஆடவர் திட்டமிட்டுள்ளார்.

பிள்ளைகள் வாழ்க்கையில் அவதிப்படக்கூடாது என்று அவர் கருதுவதாகப் பிரிட்டனின் Mirror நாளேடு தெரிவித்தது.

பிள்ளைகளின் வெளிப்படையான அனுமதியின்றித் தம்பதி அவர்களைப் பெற்றெடுக்க உரிமை இல்லை என்பது அவரது வாதம்.

ஒரு குழந்தை எப்படிப் பிறக்குமுன் பெற்றோரிடம் அனுமதி கேட்கமுடியும் என்பதுபற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

அனுமதியின்றிப் பெற்றோர் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் போக்கு குறித்து 27 வயது ரஃபேல் பிள்ளைகளைப் பெற்றோரிடம் கேள்வி கேட்கத் தூண்டியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ரஃபேல், பிள்ளைகள் இல்லாத வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் இயக்கத்தில் முன்னணி உறுப்பினராக உள்ளார்.

பிள்ளைகள் பெற்றோருக்கு எவ்விதத்திலும் கடன்படவில்லை என்று வாதிடும் அவர், பெற்றோர் தங்கள் மகிழ்ச்சிக்காகவே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறிவருகிறார்.


Top