Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தடுப்பூசி போட்டுக்கொண்டார், 1 மில்லியன் டாலர் வீட்டை வென்றார்

ஹாங்காங்கில், 35 வயது ஆடவருக்கு சுமார் 1.4 மில்லியன் டாலர் (சுமார் 1.9 மில்லியன் வெள்ளி) மதிப்புமிக்க வீடு பரிசாகக் கிடைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
தடுப்பூசி போட்டுக்கொண்டார், 1 மில்லியன் டாலர் வீட்டை வென்றார்

(படம்: YouTube/ Sino Group)

ஹாங்காங்கில், 35 வயது ஆடவருக்கு சுமார் 1.4 மில்லியன் டாலர் (சுமார் 1.9 மில்லியன் வெள்ளி) மதிப்புமிக்க வீடு பரிசாகக் கிடைத்துள்ளது.

அதற்குக் காரணம், தடுப்பூசி போட்டுக்கொண்டது!

ஹாங்காங்கில் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்களை ஈர்ப்பதற்கு அதிர்ஷ்டக் குலுக்கில் ஒரு மில்லியன் டாலர் வீடு, பரிசாக முன்வைக்கப்பட்டது.

இங் டெங் ஃபொங் (Ng Teng Fong) அறக்கட்டளை, Chinese Estates Holdings சொத்து மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு அதிர்ஷ்டக் குலுக்கை நடத்தின.

ஹாங்காங்கில் வீடுகளின் விலை அதிகமாக உள்ள நிலையில், அதிர்ஷ்டக் குலுக்கு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நல்ல உந்துதலாக அமையும் என்று எண்ணப்பட்டது.

வீட்டை வென்ற ஆடவருக்கோ அளவில்லா ஆனந்தம்!

வாடகை வீட்டில் வசித்துவந்தத் திரு. லீக்கு முதல்முறையாகச் சொந்த வீடு கிடைத்துள்ளது.

சமையல்காரராகப் பணிபுரியும் நானும், உணவகத் துறையிலுள்ளவர்களும் நிச்சயமற்ற சூழலால் பாதிக்கப்பட்டோம். பொருளியல் மீட்சியை ஊக்குவிப்பதற்கு என் பங்கை ஆற்றத் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். அதற்கு வீடே பரிசாகக் கிடைக்கும் என்று எண்ணவில்லை,

என்று அவர் சொன்னார்.

இந்நிலையில், ஏற்பாட்டாளர்கள், இரண்டாம் கட்ட அதிர்ஷ்டக் குலுக்கையும் அறிவித்துள்ளனர்.

முதல் பரிசு 1.5 மில்லியன் டாலர் மதிப்புமிக்க இன்னொரு வீடு!

இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் தடுப்பூசியை ஒரு முறையாவது போட்டுக்கொள்வோர், அதிர்ஷ்டக் குலுக்கிற்குத் தகுதி பெறுவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்