Images
  • Mangkhut Flight Disruptions
    (படம்: Anthony WALLACE / AFP) 

மங்கூட் சூறாவளியால் ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் விமானச்சேவைகள் பாதிப்பு


மங்கூட் (Mangkhut) சூறாவளியால் ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உட்பட விமானச்சேவைகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று கேதே பசிஃபிக் (Cathay Pacific) விமான நிறுவனம் கூறியுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு 400க்கும் அதிகமான விமானச் சேவைகளை நிறுவனம் ரத்துசெய்துள்ளது.

விமானச்சேவைகளை ரத்துசெய்த 5 அனைத்துலக நிறுவனங்களில், கேதே பசிஃபிக், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவையும் அடங்கும்.

மங்கூட் சூறாவளி கடுமையான சேதம் ஏற்படுத்தக்கூடும் என்று ஹாங்காங் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Top