Images
  • mangkhut
    (படம்: AP/Bullit Marquez)

பிலிப்பீன்ஸைத் தாக்கியுள்ள மங்கூட் சூறாவளி

மங்கூட் சூறாவளி பிலிப்பீன்ஸின் வட பகுதியைத் தாக்கியுள்ளது. அது வலுவான காற்றுடன் கனத்த மழையும் கொண்டு வந்துள்ளது.

அது வரும் பாதையில் சுமார் ஐயாயிரம் பேர் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது.சூறாவளி வருவதற்கு முன்னரே பல்லாயிரக் கணக்கானோர் அவர்களின் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச்சென்று விட்டனர்.

இந்த ஆண்டு பிலிப்பீன்ஸைத் தாக்கும் சூறாவளிகளில் மங்கூட் ஆக மோசமானது எனக் கூறப்படுகிறது.

தாய்லந்து மொழியில் மங்கூட் என்றால் மங்குஸ்தீன் பழம் என்று பொருள்.

கடற்கரைப் பகுதிகளில் நிலத்துக்கு மேல் 7 மீட்டர் வரை சூறாவளி சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
சில இடங்களில் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பள்ளிகளும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
பிலிப்பீன்ஸுக்குப் பிறகு, ஹாங்காங், சீனாவை நோக்கி மங்கூட் சூறாவளி நகரக்கூடும். 

Top