Images
மங்கூட் சூறாவளியின் சீற்றம்
மங்கூட் ராட்சத சூறாவளி இன்று (15 செப்டம்பர்) பிலிப்பீன்ஸைத் தாக்கியது.
கனத்த மழையைக் கொண்டு வந்த சூறாவளியினால் மின்சாரம், தொலைத்தொடர்பு போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன
பிலிப்பீன்சில் லூசோன் தீவில் சூறாவளி கரையைக் கடந்தது.
மணிக்குச் சுமார் 305 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் புயல்காற்று இவ்வாண்டு பிலிப்பீன்சைத் தாக்கும் 15வது ஆக மோசமான சூறாவளி.
அதிகாலை கரைகடந்த புயல் வழியிலுள்ள வீடுகளையும் கட்டடங்களையும் சேதப்படுத்தியது.
மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மின்சாரக் கம்பங்கள் கீழே விழுந்து சாலைகளை மறித்துக் கிடக்கின்றன.
புயல் ஓயும் வரை வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாமெனப் பொதுமக்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

