Images
  • Mangkut Cyclone
    (படம்: AP) 

மங்கூட் சூறாவளி - 14 பேர் மாண்டனர்


பிலிப்பீன்ஸின் வடக்குப் பகுதியில் மங்கூட் சூறாவளியால் குறைந்தது 14 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் நிலச்சரிவுகளாலும், வீடுகள் சேதமடைந்ததாலும் மாண்டனர்.

மேலும் இருவரைக் காணவில்லை என்ற நிலையில், மாண்டோர் எண்ணிக்கை உயரலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.

பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறித் தற்காலிகத் தங்குமிடங்களில் உள்ளனர்.

சூறாவளியால் ஏற்படும் ஆபத்து நீங்கும்வரை வீடு திரும்பவேண்டாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

மணிக்கு 250 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசிய காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூறாவளி தற்போது சீனாவின் தெற்குக் கரையை நோக்கி நகர்ந்துவருகிறது. 

Top