Images
  • hk

ஹாங்காங்கைத் தாக்கிய மங்கூட் சூறாவளி

ஹாங்காங்கை மங்கூட் சூறாவளி தாக்கி வரும் நிலையில், அதிகாரிகள் எச்சரிக்கையை அதிஉச்சமான பத்தாம் நிலைக்கு உயர்த்தியுள்ளனர்.

மங்கூட் சூறாவளியால் அந்நகரம் நேரடியாகப் பாதிக்கப்படாது என்றபோதும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


ஆக வலுவான அந்தச் சூறாவளியால் சாலைகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நகரவாசிகள் சிலர் கட்டடங்கள் சாய்வதாகக் கூறினர். சிலர் சன்னல்கள் எந்த நேரத்திலும் உடையக்கூடிய வலிமையுடன் மழைப் பெய்வதாகக் கூறினர்.

திடீர் வெள்ளம், புயல் காற்றுடன், 14 மீட்டர் வரை கடல் அலை உயரலாம் என்று எச்சரிக்கப்பட்டது. மணிக்குச் சுமார் 232 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று அடித்துள்ளது.


மங்கூட் சூறாவளி, நாளை சீனாவின் குவாங்டோங் (Guangdong), ஹாய்னான் (Hainan) ஆகிய மாநிலங்களின் கரையோரப் பகுதிகளைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, ஏற்கனவே சிவப்பு விழிப்புநிலையை அறிவித்துள்ளது.
பிலிப்பீன்ஸில் மங்கூட் சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 25க்கும் அதிகமானோர் மாண்டனர்.  

Top