Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மணிலா வட்டாரத்தில் கிருமிப்பரவலின் வேகம் குறைந்து வருவதாகக் கூறுகிறது பிலிப்பீன்ஸ்

 மணிலா வட்டாரத்தில் கிருமிப்பரவலின் வேகம் குறைந்து வருவதாகக் கூறுகிறது பிலிப்பீன்ஸ்

வாசிப்புநேரம் -
மணிலா வட்டாரத்தில் கிருமிப்பரவலின் வேகம் குறைந்து வருவதாகக் கூறுகிறது பிலிப்பீன்ஸ்

(படம்: AFP/Jam Sta Rosa)

பிலிப்பீன்ஸின் மெட்ரோபோலிடன் மணிலா (Metropolitan Manila) வட்டாரம் என்றழைக்கப்படும் தலைநகர் வட்டாரத்தில், கொரோனா கிருமிப்பரவலின் வேகம் குறைந்துள்ளது.

கிருமிப்பரவல் நிலவரத்தைக் கண்காணிக்கும் ஆய்வுக் குழு அதனைத் தெரிவித்தது.

இம்மாத நடுப்பகுதிக்குள், நாள்தோறும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை, 2,000-க்கும் குறைவாக இருக்கும் என்று அது கூறுகிறது.

தற்போது நாள்தோறும் பதிவாகும் எண்ணிக்கையைவிட அது கிட்டத்தட்ட 35 விழுக்காடு குறைவு.

அந்த வட்டாரத்தில் கடந்த வாரம் கிருமிப்பரவலின் வேகம் சுமார் 30 விழுக்காடு குறைந்ததை ஆய்வுக் குழு சுட்டியது.

வரும் வெள்ளிக்கிழமை வரை அந்தப் பகுதியில் கடுமையான முடக்கநிலை நடப்பில் உள்ளது.

நேற்று பிலிப்பீன்ஸில் 7,000-க்கும் அதிகமான புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

சுமார் 200 பேர் மாண்டனர்.

தற்போது அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.1 மில்லியனாக உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்