Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ்: போக்குவரத்து நெரிசலால் மடியும் நோயாளிகள்

மணிலாவில் அவசர மருத்துவ வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு சரியான நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாததால் நோயாளிகள் மடியும் நிலை உருவாகியிருக்கிறது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மணிலாவில் அவசர மருத்துவ வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு சரியான நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாததால் நோயாளிகள் மடியும் நிலை உருவாகியிருக்கிறது.

அவசர வாகனங்களுக்கென அமைக்கப்பட்டுள்ள பாதைகளை மற்ற வாகனங்களும் பயன்படுத்துகின்றன. அவை நெருக்கடி நேரத்தின்போது வழிவிட மறுக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

வாகனமோட்டிகளிடம் புரிந்துணர்வு இல்லாததால் உயிருக்குப் போராடுவோரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடிவதில்லை என்று அவசர வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

20 நிமிடத்தில் சென்றடைய வேண்டிய இடத்தை 40 நிமிடமானாலும் அடைய முடியவில்லை என்றும் இதனால் உயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர்கள் வருந்துகின்றனர்.     

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்